ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் வீட்டிற்க்கு அவரது பழைய நண்பர் ஒருவர் அவரது குடும்பத்துடன் வந்தார்கள். வெளிநாட்டில் இருந்து தற்போது தான் ஊருக்கு திரும்பியதாக கூறினார்கள். அவர்களை பார்த்து அருணாச்சலம் பார்வதி தேவி என அனைவரும் வரவேற்று பேசினார்கள். அந்த சமயம் ரம்யாவை பார்த்த அவர்கள் உடனே அவர்கள் பையனுக்கு ரம்யாவை திருமணம் முடித்து வைக்கலாம் என்று நினைத்தார்கள். அதை அருணாச்சலமிடம் தனியாக கேட்கவும் செய்தார்கள். அவரும் இதை பற்றி அக்காவிடம் பேசி முடிவு எடுத்து அழைப்பதாக கூறினார். மேலும் தேவி இடம் அதை பற்றி பேசவும் செய்தார். தேவி தனக்கு இதில் கருத்து சொல்லவோ, சம்மதம் சொல்லவோ எதுவும் இல்லை, என் மகளின் விருப்பம் என்றார். முடிந்தால் நீயே ரம்யாவிடம் பேசி அவள் விருப்பம் என்ன என்று தெரிந்து கொள் என்றார். உடனே அருணாச்சலம் ரம்யாவிடம் பேசினார். இந்த வரன் பற்றி விவரமாக கூறினார். ஆனால் ரம்யா தான் காதலித்தது பார்த்திபன் மாமாவை தான், அவரை தான் தன் உயிர் இருக்கும் வரை தன் புருஷனாக நினைப்பேன் என்று கூறினார். மேலும் வேறு யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை எனவும் கூறினார். இதை எல்லாம் கேட்டு அருணாச்சலம் வேதனை அடைந்தார். ஆனால் ivargl பேசுவதை காவ்யா கேட்டுவிட்டார். ரம்யா பார்த்திபனை 15 வருடமாக காதலித்தார் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் இருந்தார். அதை நேரடியாக பார்த்திபன் இடம் கேட்கவும் செய்தார். அதற்கு பார்த்திபன் என்ன கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….