ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை சாந்தி முகூர்த்தத்திற்கு அவரது மாமியார் அலங்காரம் செய்தார். மேலும் எப்போதும் இது போல் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்தார். பாஸ்கர் அவரது அறையில் பார்வதுக்காக காத்திருந்தார். பார்வதி சென்றதும் பார்வதி நடந்த அனைத்துக்கும் மன்னிப்பு மற்றும் நன்றியை கூறினார். பாஸ்கர் அவரிடம் ஆசையாக பேசி நெருங்கி வந்தார். ஆனால் பார்வதி தனக்கு தனக்கு மிகவும் அலுப்பாக இருப்பதாக கூறினார். தூக்கம் வருவதாக கூறினார். அதனால் பாஸ்கரும் தூங்கினார். அதே நேரம் சந்தியா மற்றும் சரவணன் இருவரும் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசித்தார்கள். மேலும் இனி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார் சரவணன். சந்தியா தானும் படிக்க ஆரம்பிப்பேன் என்று கூறினார். அதே நேரம் விக்கியின் அப்பா கருணாகரன் தன் மகனை ஜெயிலில் அடைத்ததை நினைத்து கோபம் கொண்டார். இதற்கு என்ன காரணம் என்று கேட்டார். அங்கு இருந்தவர்கள், அர்ச்சனா தான் காரணம் என்றார்கள். அவள் தான் மீண்டும் மீண்டும் விக்கிக்கு அழைத்து பேசி அவரை உசுப்பேற்றி பிரச்சனையில் மாட்டி விட்டார் என்றார்கள். இதனால் அர்ச்சனாவை எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்கு என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…