தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அபி வீட்டுக்கு வந்ததும் சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அதை பார்த்த சரஸ்வதி வீட்டில் எந்த வேலை வேணாலும் செய் ஆனால் சமையல் சமந்தமான எந்த வேலையும் செய்யாதே என்றார். இந்த சமையல் அறைக்குள் வர எவளவு திட்டம் போட்டு வந்தோம் என்று பேசிக்கொண்டார்கள். அதை கேட்ட வசுந்தரா என்ன திட்டம் என்ற விசாரித்தார். அப்போது சரஸ்வதி தான் செய்த திட்டம் படி தான் எல்லாம் நடந்தது. அபிக்கே தெரியாமல் இந்த திட்டத்தில் சேர்துவிட்டோம் என்று கூறினார். இதனால் மேலும் கோவம் கொண்ட வசுந்தரா உடனே கோதையிடம் இதை சொல்வேன் என்றார். சரஸ்வதி அத்தையிடம் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சினார். ஆனால் வசுந்தரா நேராக கோதையிடம் சென்று சொல்ல ஆரம்பித்தார். ஆனால் அங்கு சென்றதும் அபி அக்கவுக்கு இன்னும் உடம்பு சரி ஆக வில்லை என்றும் அதற்குள் எதற்காக அபி வர வேண்டும் என்றும் மாற்றி கூறினார். பின் கோதை சென்றபின் சரஸ்வதி அபியிடம் சும்மா விளையாண்டதாக கூறினார். மேலும் இந்த திட்டத்தில் தன்னையும் சேர்த்து இருக்கலாம் என்று கூறினார். பின் அருகம்புல் ஜுஸ் அனைவருக்கும் சரஸ்வதி தயார் செய்தார். அதை குடித்த வசுந்தரா ருசியாக இருப்பதாக ஆஹா ஓஹோ என்று பேசினார். மேலும் ராகினி குடித்து பார்த்து இன்னொரு டம்ளர் தருமாறு கேட்டார். இதை பார்த்த கோதை என்ன கலந்துள்ளது என்று விசாரித்தார். அதில் பனங்கல்கண்டு தட்டி பொற்தாக கூறினார் சரஸ்வதி. உடனே கோதை அதற்கு கோவம் கொண்டு கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…