இந்தியாவில் வருகிறதா ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரயில்?
சுற்று சூழல் பாதுகாப்பு கருதியும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைக்கும் பொருட்டும் இந்திய ரயில்வேயில் ஹைட்ரஜன் வாயுக்கள் மூலம் இயங்கும் ரயிலை தொடங்க இருப்பதாக ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி வெகு விரைவில் கோரப்படும் எனவும் அறிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து ரயில் போக்குவரத்தாகவே இருக்கிறது. இதில் பெரும்பாலான ரயில்கள் டீசல் லோகோமோட்டிவ் ஆகவே இருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு இவை வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு என்பது மிக மிக அதிகம். இந்த வெளியீட்டை குறைக்கும் வகையிலேயே ஹைட்ரஜன் வாயுக்கள் மூலம் இயங்கும் ரயிலை தொடங்க உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள் ஹைட்ரஜன் வாயுக்கள் மூலம் இயங்கும் ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியாவும் அத்தகைய ரயில்களை இயக்கும் திட்டத்தில் இறங்கி உள்ளது. நீர் மற்றும் நீராவியை மட்டுமே வெளியிடும் ஹைட்ரஜன் ரயில்களால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படுவதில்லை. இத்திட்டம் இந்தியாவில் முதல் முதலாக வடக்கு ரயில்வே பிரிவிற்கு உட்பட்ட ஹரியானாவின், சோனிபட்-ஜீந்த் வரை 89 கி.மீ தூரத்திற்கு செயல்படுத்தப்பட்டு சோதிக்கப்படும் என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
“ இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மனித இனம் கண்டு கொள்ளும் போது அது இந்த மனித இனத்திற்கு தரும் வரங்கள் அதிகம், புரட்சிகர திட்டத்தை செயல்படுத்த இருக்கும் இந்திய ரயில்வே வாரியத்திற்கு வாழ்த்துக்கள் “