தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வண்டியை ஓட்டத்தெரியாமல் ஓட்டி வந்து கார்த்திக் வண்டி மீது மோதினார். மோதியதும் அந்த இடத்தில் இருந்து உடனே தப்பிக்க வேண்டும் என்று வண்டியை உடனே எடுத்து கிளம்பினார்கள். ஆனால் நமச்சி மற்றும் நடேசன் இந்த வண்டியை துறத்தி பிடித்தார்கள். வந்து பார்த்தால் நம்ம வீட்டு மருமகள்கள் என்று தெரியவந்தது. நடேசன் கோவத்தில் என்ன உடை இது? என்ன இதெல்லாம்? கடைக்கு போவதாக பொய் சொல்லி ஊர் சுற்றுகிரீர்களா என்று கேட்டார். அதற்கு சரஸ்வதியும் வசுந்தரா பிறந்தநாள் என்பதால் அவரை சந்தோசமாக வைத்துக்கொள்ள தான் இப்படி செய்தோம் என்று கூறினார். ஆனால் நடேசன் கோதையிடம் எப்படியும் சொல்லி விடுவார் என்று கூறினார் நமச்சி. உடனே நடேசன் சாம்பார் வடை சாப்பிட்ட போது எடுத்த வீடியோவை எடுத்து காமித்தார். இதனால் நடேசனும் அவர்களை கார்த்திக் கண்ணில் படாமல் தப்பிக்க வைத்தார். கார்த்திக் வந்து கேட்டதற்கு எதேதோ சொல்லி சமாளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். சரஸ்வதி வசுந்தரா மற்றும் மின்னல் மூவரும் அடுத்ததாக மால் ஒன்றுக்கு சென்றார்கள். அங்கு சாப்பாடு சாப்பிடும் போட்டி ஒன்று வைத்தார்கள். அதில் சரஸ்வதி தானும் பங்கு கொள்வேன் என்று கலந்துகொண்டார். அந்த போட்டியில் 10 நிமிடத்தில் 15 பர்கர் சாப்பிட வேண்டும் என்பதே விதி. அதையும் சரஸ்வதி முயற்சி செய்து சாப்பிட்டு வெற்றியும் பெற்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…