Eeramana Rojave 2 Today Episode | 26.05.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரையை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் துரையை விசாரித்தார்கள். அவர் கூடவே மஹா மற்றும் சக்தி இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது புலம்பினார்கள். துரையும் தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தன்னிடம் வேலை செய்தவன் இந்த துரோகத்தை செய்துவிட்டான் என்று கூறினார். ஆனால் போலீஸ் அதை காதில் வாங்கவில்லை. உங்கள் கம்பேனி நபர் செய்தது நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டுமென்றார். 3 கோடி பணம் கொடுத்த பின் தான் வெளியே விடுவேன் என்று கூறினார். அந்த நேரம் அருணாச்சலம், ஜீவா மற்றும் பார்த்திபன் வந்து என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அப்போது துரை ஒருவரால் எமாற்றாட்டது தெரிய வந்தது. இதனால் உடனே அருணாச்சலம் எதாவது உதவி செய்யுமாறு அந்த போலீஸ் இடம் கேட்டுக்கொண்டார். அவரும் நாளை மாலைக்குள் பணமும் அந்த நபரையும் கூட்டி வந்தால் தான் துரையை வெளியில் விட முடியும் என்றார். இதனால் அருணாச்சலம் உடனே பார்த்திபன் மற்றும் ஜீவா இருவரையும் அந்த நபரை உடனே தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author