TATA IPL 2022 | QF 2 | ’15 ஆவது முறையாக ரசிகர்களின் இதயத்தை வென்றது ஆர்சிபி’

டாடா ஐபிஎல் 2022-யின் குவாலிபையர் 2 போட்டியில் பெங்களுரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி இருக்கிறது ராஜஸ்தான் அணி.

முதலில் ஆடிய பெங்களுரு அணி நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. பட்லரோ இது எனக்கே பத்தாது என்பது போல 60 பந்துகளில் 10 போர்கள் 6 சிக்ஸ்கள் உட்பட 106 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

“ இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 15 ஆவது முறையாக ரசிகர்களின் இதயத்தை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author