ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இங்கு போய் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழம்பினார். அந்த நேரம் காவ்யாவிடம் கடைசியாக பேசிய தோழி பார்த்திபனும் அழைத்தார். காவ்யா கடைசியாக என்னிடம் தலை வலிக்கிறது அதனால் இங்கேயே இருந்து விட்டு பின் செல்வதாக கூறினாள் என்று கூறினார். அதை கேட்டதும் பார்த்திபன் அப்போ காவ்யா இந்த இடத்தை விட்டு இங்கேயும் போகவில்லை என்ற முடிவுக்கு வந்தார். உடனே அவர் படிக்கும் இடத்துக்கு திரும்பி சென்றார். அதற்குள் அர்ஜுன் சக்தியிடம் காவ்யா வர மாட்டார் என்று கூறினார். உடனே அருணாச்சலம் அவருக்கு தெரிந்த போலீஸ் இடம் புகார் கொடுக்க ஆரம்பித்தார். அதற்குள் பார்த்திபன் காவ்யா இருக்கும் இடத்தை தேட ஆரம்பித்தார். அங்கு காவ்யா எழுதி போட்ட பேப்பரை பார்த்ததும் காவ்யா அங்கு தான் இருக்கிறார் என்று அவருக்கு தெரிய வந்தது. பின் அவரை கண்டும் பிடித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…