தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தனக்கு இந்த கம்பேனியில் நமச்சி மரியாதை கொடுப்பது இல்லை என்று கூறினார். கோதை அதற்கு நமச்சி இனி உன்னை மரியாதையாக நடத்துவார். ஆனால் அதற்காக நீ அவனை இப்படிப்பட்ட வார்த்தையை பேசியதும் தவறு தான் என்று கூறினார். நமச்சி செய்வதும் தவறு தான் நீ செய்வதும் தவறு தான். இதில் இருவருமே மாற வேண்டும் என்று கோதை கூறினார். பின் கார்த்திக் எதற்கு எடுத்தாலும் கோவப்படுவது நல்லதல்ல, அது குடும்பத்திலும் சரி பிசினஸ்சிலும் சரி என்று அறிவுரை கூறினார். ஆனால் கார்த்திக் அதை எதும் காது கொடுத்து கேட்கவில்லை. மேலும் கோவம் தான் கொண்டார். நடேசன் மனதில் ஜோசியர் சொன்னது போல் குடும்ப்ததில் விரிசல் வந்து விடுமோ என்று பயந்தார். ஆனால் அதை கோதையிடம் சொல்லாமல் மறைமுகமாக பேசினார். கார்த்திக் நடவடிக்கை எதுவும் சரி இல்லை என்று கூறினார். ஆனால் கோதை எப்படியும் அவன் சரி ஆகி விடுவான். அவன் என் வளர்ப்பு என்று கூறினார். மேலும் தமிழ் சொன்ன வேலையை மட்டும் எடுத்து நடத்துவது அவனுக்கு கோவம் அதனால் தான் அப்படி நடந்து கொள்கிறான் என்று கூறினார் கோதை. ஆனாலும் நடேசன் மனதில் இனம் புரியாத பயம். உடனே தமிழ் சரஸ்வதியை பார்த்து பேசினார். ஜோசியர் சொன்னதை பற்றி கூறினார். மேலும் கார்த்திக் தவ்து தவருசெய்தால் மன்னித்து பொறுமையாக நடந்ததுகொள்ளும்படி கூறினார். தமிழும் அப்படியே நடப்போம் என்று கூறினார். வசுந்தரா கார்த்திக்கை பார்த்து அவரை அமைதி படுத்த முயற்சி செய்தார். ஆனால் எதையுமே கார்த்திக் கேட்கும் நிலையில் இல்லை. மேலும் வசுந்தரா அம்மாவுக்கு பேதி மாத்திரையை கலந்து கொடுத்தது சரஸ்வதி தான் என்று கார்த்திக் கூறினார். ஆனால் வசுந்தரா அதை நம்பவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…