தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தன் அம்மாவுக்கு என்ன நடந்தது என்று கோதையிடம் சொல்ல வேண்டும் என்று தோனினாலும் அவரால் சொல்ல முடியவில்லை. நேற்று நடந்த விஷயத்தை பற்றி தான் யோசித்தேன் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று கோதை முன் சமாளித்து சென்றார். பின் கார்த்திக் அவர்கள் அறைக்கு வந்ததும் எதற்காக சொல்ல வில்லை. மீண்டும் அவர்களைப் போல் ஒரு துரோகியை எப்படி மன்னிக்க முடியும் என்று கேட்டார். ஆனால் வசுந்தரா, தனக்கும் இது பெரிய அதிர்ச்சி தான். எனக்கு அவர்கள் செய்தது பெரிய துரோகம் தான் ஆனால் அவர்கள் செய்த உதவியை தன்னால் மறக்க முடியாது என்று கூறினார். அப்படி என்ன உதவி செய்துவிட்டார்கள் என்று கார்த்திக் கேட்டதற்கு. காதலிக்கும்போது நம் காதல் திருமணத்தை கோதையின் சம்மதத்துடன் நடந்தது சரஸ்வதியின் திட்டம் மற்றும் தமிழ் மாமாவின் முயற்சியும் தான். அந்த நன்றியை நன எப்போதும் மரக்க மாட்டேன் என்று வசுந்தரா கூறினார். உடனே கார்த்திக் உன் நல்ல மனதுக்கு எப்படி உனக்கு துரோகம் செய்ய மனசு வந்தது என்று வருந்தினார். மேலும் வசுந்தரா துணி துவைக்க செல்லும்போது தானும் தன் துணியை போட வேண்டும் என்று கூறினார் சரஸ்வதி. ஆனால் இனி எதுவும் சேர்ந்து செய்யப் போவது இல்லை. எல்லாமே தனி தனியாக தான் நடக்கும் என்று கூறினார் வசுந்தரா. அதை கேட்டதும் சரஸ்வதி நோருங்கிப் போனார். மேலும் அவர் பேசுவதை வசுந்தரா கேட்கவும் விரும்பவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…