தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழுக்கு மதிய உணவு கொண்டு சென்று கொடுத்தார் சரஸ்வதி. அப்போது தமிழிடம் வசுந்தரா தன்னிடம் எப்படி நடந்து கொண்டார் என்றதை கூறினார். இப்படியே போனால் இது வீட்டுக்கு பெரிய பிரச்சனையாக வந்து சேரும் என்று பயந்தார். ஆனால் தமிழ் அதெல்லாம் எதுவும் ஆகாது நான் பேசுகிறேன் வசுந்தராவிடம் என்று கூறினார் தமிழ். மேலும் இரவு வீட்டுக்கு வந்ததும் வசுந்தராவை அழைத்து பேசவும் செய்தார். நமச்சி மற்றும் மின்னல் செய்தது பெரிய தவறு தான் ஆனால் அதற்கும் சரஸ்வதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கும் சரஸ்வதிக்கும் தெரியாமல் தான் இதை செய்தார்கள் என்று கூறினார். ஆனால் வசுந்தரா தெரிந்த பின் எதற்காக என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டு கோபப்பட்டார். மேலும் தமிழை இதை பற்றி இனி தன்னிடம் பேச வேண்டாம் என்றும் கூறினார். இதனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்கள். அடுத்த நாள் செமினார் இருப்பதை சரஸ்வதி கூறினார். ஆனால் ஆங்கிலத்தில் பேச தயங்கினார். தமிழ் தான் அவரை உற்சாக படுத்தி அனுப்பினார். காலையில் கோவிலில் சிறப்பு பூஜை நடக்க இருப்பதாக கூறி சுவாமிகள் வீட்டுக்கு வந்து இருந்தார். அந்த சமயம் கோதை மற்றும் நடேசன் இருவரும் டாக்டரை பார்க்க கிளம்பிக்கொண்டு இருந்ததால் அவர் கொடுத்த பூஜை பொருட்களை சரஸ்வதி இடம் கொடுத்து வாங்கி வைக்க சொன்னார். சரஸ்வதி செமினார் போக இருப்பதால் அதை வசுந்தராவிடம் சொல்லலாம் என்று நினைத்தார். ஆனால் வசுந்தரா ஃபோனில் பேசிக்கொண்டு இருப்பதை பார்க்காமல் அவர் வேலையை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…