தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தன் அம்மாவிடம் சண்டை போட்டு மீண்டும் தன் வீட்டுக்கு திரும்பினார். அதே நேரம் சரஸ்வதியும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். உடனே சரஸ்வதியை பார்த்து பேசினார் வசுந்தரா. சரஸ்வதி மற்றும் தமிழ் இடம் நடந்து கொண்டதை நினைத்து வருந்தினார். அதற்காக மன்னிப்பும் கேட்டார். மேலும் தன் அம்மாவை சர மாரியாக திட்டியதையும் கூறினார். உங்களுடைய நல்ல மனதுக்கு எப்படியும் நல்லதே நடக்கும் என்று கூறினார் வசுந்தரா. சற்று நேரத்தில் சரஸ்வதி தமிழுக்கு அழைத்து நடந்ததை கூறினார். மிகவும் சந்தோசமாக பேசினார். தன்னிடம் வசுந்தரா பழையபடியே பேசி, நம்மை புரிந்துகொண்டார் என்று கூறினார். இதை கேட்டதும் தமிழ் மிகவும் சந்தோசம் கொண்டார். மேலும் நமச்சி தான் இதை சரி செய்தார் என்றும் கூறினார் சரஸ்வதி. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கார்த்திக் உடனே வீட்டிற்கு கிளம்பினார். வீட்டுக்கு வந்ததும் வசுந்தராவிடம் கடுமையாக நடந்து கொண்டார். வசுந்தரா நடந்ததை சொல்லியும் அதை கேட்கும் நிலையில் இல்லை கார்த்திக். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..