தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியுடன் படிக்கும் நண்பர்கள் சரஸ்வதியை தேடி கோதை வீட்டுக்கே வந்தார்கள். வந்ததில் இருந்து சரஸ்வதியின் குணம், அவரது பேச்சு, திறமை, அவர் மாமியார் மாமனார் பற்றி பேசிய விதம் என்று அவரை புகழ்ந்து பேசினார்கள். மேலும் கோதை அம்மாவே அவரது மருமகளை படிக்க அனுப்புவதை காரணம் காட்டியே தன் வீட்டில் படிக்க அனுப்பினார்கள் என்று கூறினார் ஒரு பெண். ஒரு கர்ப்பிணி பெண் இந்த நிலையிலும் படிக்க வேண்டும் என்று நினைத்து முதிர்ச்சி செய்வது என்று அனைத்தையும் கோதை பார்த்து ஆச்சரியப்பட்டார். மேலும் சரஸ்வதி போகும் இடம் எல்லாம் தன் குடும்ப கௌரவத்தையும் சேர்த்து சுமக்கிரார் என்று கோதை உணர்ந்தார். ஆன்லைன் படிக்க நீ போகலாம் என்று ஒரு வார்த்தை சொல்ல வில்லை. தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சாப்பிடாமல் விரதத்தை தொடர்ந்தார்கள். கோவிலில் தமிழுக்கு ஆயுள் கூட பூஜை நடக்க ஏற்பாடு செய்து இருந்தார் கோதை. அங்கு தமிழ் சரஸ்வதி இருவரும் சேர்ந்து அமர்ந்து பூஜையை செய்ய ஆரம்பித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….