Eeramana Rojave 2 Today Episode | 14.07.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்வதி தன் தோழியின் கடை திறப்பு விழாவுக்கு சென்றார். சென்ற இடத்தில் காவ்யா திருமணத்துக்கு முன் வேறு யாரையோ காதலித்ததாக அவர் கூறினார். அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார் பார்வதி. ஆனால் வேறு யாரிடமும் இதை பற்றி பேச முடியாமல் தவித்தார். இதனால் நேரடியாக காவ்யாவிடம் இதை கேட்டு விடலாம் என்று முடிவு எடுத்தார். மேலும் யாரும் இல்லாத நேரத்தில் காவ்யாவை பார்த்து பேசினார். திருமணத்துக்கு முன் யாரையாவது காதலித்தாயா? அதனால் தான் பார்த்திபன் உடன் சேர்ந்து வாழாமல் இருக்கிறாயா என்று தயங்கி தயங்கி கேட்டார். அதை கேட்டதும் காவ்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். என்ன பேசுவது என்று புரியாமல் நின்றார். ஆனால் கடைசியில் காவ்யா அதற்கு உண்மையை கூறினார். அதை கேட்டதும் பார்வதி அதிர்ச்சியில் உரைந்தார். அதே நேரம் பிரியாவுக்கு நரேன் அழைத்து மீண்டும் மிரட்டினான். குழந்தையை எதாவது செய்து விடுவேன் என்று மிரட்டினான். இதனால் பதட்டம் அடைந்த பிரியா உடனே ஜீவா விடம் இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் வேலையாக இருந்ததால் இதை சொல்லி பதட்டப்பட வைக்க வேண்டாம் என்று மறைத்துவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author