Mouna Ragam 2 Today Episode | 26.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 26.07.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக்கை மல்லிகா வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு வேண்டியதை செய்தார்கள். வருண் அவரால் முடிந்த அனைத்து உதவியையும் செய்தார். அவருக்கு தேவையான கட்டில், மெத்தை, சாப்பிட பழங்கள் என்று அனைத்தையும் வாங்கி வைத்து இருந்தார். பின் வருண் சக்தி இருவரும் அவரை கவனமாக பார்த்துக்கொண்டார்கள். ஆனால் அதே நேரம் மல்லிகா காதம்பரியை நினைத்து பயந்தார். கார்த்திக்கை சென்னைக்கே அனுப்பி வைத்து இருக்கலாம் என்று கூறினார். Idhanaalvperiya பிரச்சனை வரும் என்றார். நாளைக்கே காதம்பரி ஸ்ருதி இருவரும் பிரச்சனை செய்வார்கள் என்று பதறினார். ஆனால் அதற்கு பழனி, சொர்ணம் லட்சுமி என அனைவரும் ஆறுதல் கூறி பயப்பட வேண்டாம் என்றார்கள். பின் இரவு கார்த்திக் தூக்கம் வருவது போல் இருக்கவும் அனைவரும் தூங்க கிளம்பினார்கள். அப்போது வருண் காரில் படிக்க கிளம்பினார். ஆனால் அவரை பழனி தடுத்து நிறுத்தினார். இனி அங்கு போய் தூங்க வேண்டாம். நீ என் சக்தியை விட்டு இனி எங்கும் போக கூடாது. நானே தேடி இருந்தாலும் இப்படி ஒரு பையனை பார்த்து இருக்க மாட்டேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..