தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அந்த ரவுடிகளை கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டது சரஸ்வதிக்கு கோவம். அதை தமிழிடம் சொல்லவும் செய்தார். ஆனால் தமிழ் அதற்கு காரணம் இருப்பதாக கூறினார். நானும் கார்த்திக் மட்டும் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு சரியான அடி கிடைத்து இருக்கும். ஆனால் எங்களோடு நீயும் வசுந்தராவும் இருப்பதால் உங்களின் பாதுகாப்பு தன் முக்கியம். அதனால் தான் அப்படி செய்தேன். என் மனைவி மற்றும் என் தம்பியின் மனைவி இருவரின் பாதுகாப்பை தாண்டி என் தன்மானம் ஒன்றும் பெரிதல்ல என்று கூறினார். இதனால் சரஸ்வதி தமிழ் செய்த காரியம் சரிதான் என்று புரிந்து கொண்டார். பின் சரஸ்வதி ஒரு சர்ப்ரைஸ் வைத்து இருப்பதாக கூறினார். கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் காதலிக்க ஆரம்பித்த நாள் இன்று. அதனால் அதை கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். உடனே அந்த ரிசார்ட்டில் நிகழ்ச்சி நடத்துபவரை பார்த்து தமிழ் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இரவு நிகழ்ச்சி தொடங்கியதும் கார்த்திக் வசுந்தராவுக்கு அந்த சர்ப்ரைஸ் நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் கல்லூரியில் சந்தித்தது, பழகியது, காதல் செய்யும்போது எடுத்த புகைப்படங்கள் என பழைய நினைவுகளை காமிதார்கள். அதை பார்த்ததும் கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவருமே மிகவும் சந்தோசம் கொண்டார்கள். மேலும் கார்த்திக் மீண்டும் வசுந்தரா மீது காதலில் விழுந்தார். பின் அன்று இரவு அவர்களது வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலாம் என்றும் முடிவு எடுத்தார்கள். அதற்கான மோதிரத்தை வசுந்தரா கையில் போட வந்தார். ஆனால் அதற்குள் கார்த்திக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் யார் பேசினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…