தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா கார்த்திக்கை பார்க்க ஆசை பட்டார். அதனால் உடனே கார்த்திக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது கார்த்திக்கு சாப்பாடு எடுத்து வருவது போல் பார்க்க வருவதாக கூறினார் வசுந்தரா. ஆனால் கார்த்திக் தானே வீட்டுக்கு வருகிறேன் என்று கூறினார். அதற்குள் வீட்டில் தமிழ் கார்த்திக்கு சாப்பாடு எடுத்து செல்ல கிளம்பினார் சரஸ்வதி. இதை பார்த்த நடேசன், தமிழ் சரஸ்வதியை ஒதுக்கி வைத்து சாப்பிடுவது நல்லது இல்லை என்று நடேசன் கோதை இடம் கூறினார். அதை பற்றி யோசிக்கிறேன் முதலில் கார்த்திக் மற்றும் தமிழை வீட்டுக்கு வர சொல்லுங்கள் என்றார். அதன்படி தமிழ் கார்த்திக் இருவருமே சேர்ந்து வீட்டுக்கு சாப்பிட வந்தார்கள். அதற்குள் கீதாவை வைத்து சந்திரகலா வேறு திட்டம் போட்டார். தமிழ் சரஸ்வதி இருவருக்கும் திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகியும் எப்படி அவள் உண்டாகாமல் இருக்கிறாள் என்று சந்தேகம் வந்தது. அதை பற்றி மேலும் விவரம் தெரிந்துகொள்ள கீதாவை கோதை வீட்டுக்கு அனுப்பினார் சந்திரகலா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…