தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் சாப்பிட வீட்டுக்கு வந்தார்கள். அதை பார்த்த கீதா, எபோதும் சாப்பாடு கம்பேனிக்கு தானே செல்லும் என்று கேட்டார். பின் சரஸ்வதி அனைவருக்கும் பரிமாறிவிட்டு தனக்கும் தமிழுக்கும் தட்டில் சாப்பாடு போட்டுவிட்டு மாடிப்படியில் அமர்ந்து சாப்பிட கிளம்பினார்கள். அப்போது கீதா வேண்டும் என்றே அவர்களை குத்தி காட்டுவது போல் பேசினார். என்னதான் தமிழும் சரஸ்வதியும் ஒன்றாக சேர்ந்து இந்த குடும்பத்துக்கு நல்லது செய்தாலும், சரஸ்வதி கல்யாணத்தில் செய்த துரோகம் பெரிது. அதனால் கோதைக்கு ஏற்ப்பட்ட அவமானம் பெரிது என்று குத்தலாக பேசினார். மேலும் அதை மறந்து மீண்டும் தமிழ் சரஸ்வதியை மன்னித்து வீட்டில் ஒருவராக சாப்பிட வைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் கோதை, தமிழ் சரஸ்வதியை நிறுத்தி இனி இருவரும் சாப்பாடு மேலே அமர்ந்து சாப்பிடலாம் என்று கூறினார். முழு மனதோடு மன்னித்து விட்டேன், இனி அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என்று கூறினார். இதை கேட்ட தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நம்ப முடியாமல் திகைத்தார்கள். பின் நன்றி கூறி சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போது தமிழும் சரஸ்வதியும் அம்மா மன்னித்து விட்டதால் இன்று இரவே முதல் இரவு ஏற்பாடு செய்ய முடிவு எடுத்தார்கள். நமச்சிக்கு அழைத்து கோதை அம்மா மன்னித்ததை கூறினார் தமிழ். மேலும் இன்று முதல் இரவுக்கு ஏற்பாடு செய்ய போவதாகவும் கூறினார். இது ஒளிந்து நின்று கேட்ட கீதா உடனே இந்த விஷயத்தை சந்திரகலா விடம் கூறினார். இதை கேட்டதும் சரஸ்வதியை இந்த வீட்டில் வாழ விடாமல் அப்பா வீட்டுக்கே விரட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தார் சந்திரகலா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…