IND vs WI | 4th T20 | ‘போட்டியை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’
IND vs WI 4th T20 Starts Today
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று ப்ளோரிடாவில் துவங்க இருக்கிறது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று ப்ளோரிடா மைதானத்தில் இரவு 8 மணி அளவில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வென்றுவிட்டால் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றிவிடும்.
“ ரோஹிட் சர்மா போன ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். பிரச்சினை பெரிதாக இல்லையெனினும் இன்றைய போட்டியில் களம் இறங்குவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “