தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் ஒலித்த மந்திரங்கள்!
தமிழக அரசு கொண்டு வந்த ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் 47 கோயில்களில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே ஒலித்த இராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் கருவறைக்குள் இன்று முதல், தமிழில் மந்திரங்கள் ஒலித்தன.
அர்ச்சனை என்று நீட்டியவுடன் புரியாத மொழியில் அர்ச்சகர் செய்யும் மந்திரங்கள் எல்லாம் இனி தமிழில் ஒலிக்கும் என்பதால் பக்தர்களிடையே இது பெரும் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு ஆண்டு காலமாக தமிழ்குடி கட்டிய கோவில் என்றாலும் அந்த யாதொரு கோவிலிலும் ஒலித்து வ்ந்த மந்திரம் என்பது சமஸ்கிருதமாகத் தான் இருந்தது. இன்று அது தமிழில் ஒலிக்கிறது என்றால் அது தமிழ்க்குடிக்கு பெருமை தானே!
“ ஒரு மொழியை உயிரின் அளவுக்கு கொண்டாடுகின்ற ஒரு இனம் என்றால் அது தமிழினமாகத்தான் இருக்க முடியும், அந்த வகையில் தமிழ் எங்கு தூக்கி பிடிக்கப்பட்டாலும் அங்கு தமிழினம் நின்று பெருமை கொள்ளும். எங்கும் தமிழ் ஒலிக்கட்டும் யாவிலும் தமிழ் நிமிரட்டும் “