தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியை காப்பாற்றியதற்காக அர்ஜுனுக்கு நன்றி கூறி அவருக்கு கோதை கம்பேனியில் வேலை போட்டு கொடுத்தார்கள். அந்த அர்ஜுனும் தனது திட்டம் போல் எல்லாம் ந்தக்கிறது என்று தன் நண்பன் இடம் கூறினார். இரவு தூங்க போகும் நேரம் சரஸ்வதி தமிழுக்கு மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தார். ஆனால் அவர் அந்த அழைப்பை ஏர்க்கவில்லை. மேலும் அதே நேரம் மது தமிழுக்கு அழைத்து பேசினார். பேசும்போதே குரலில் தடுமாற்றம் இருந்தது. தமிழை ஒரு முறை பார்த்து பேச வேண்டும் என்று கூறினார். ஆனால் இரவு நேரம் அதுவும் வீட்டில் யாரும் இல்லாத நேரம் அங்கு நான் வருவது சரி இல்லை என்றார். ஆனாலும் அவர் பேசியதில் எதோ ஒரு உறுத்தலாக இருக்கிறது என்று உடனே மது வீட்டுக்கு தமிழ் கிளம்பினார். அங்கு சென்ற நேரம் மது தூக்கு போட போனார். அதை தமிழ் தடுத்து நிறுத்தி அவருக்கு புரிய வைத்தார். மேலும் மது தான் செய்த தவறை உணர்ந்து பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…