தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மது வீட்டு வாசலில் ரவுடிகள் பிரச்சனை செய்தார்கள். இதனால் பயந்து போன மது மீண்டும் மீண்டும் தமிழுக்கு அழைத்தார். ஆனால் தமிழ் அதை எடுக்கவில்லை. மேலும் நமச்சி இடம் நடப்பதை கூறவும் செய்தார். நமச்சியும் அவர் அழைப்பை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும் மது வீட்டுக்கு arugilvyaarum உதவிக்கு வரவில்லை என்பதால் தமிழுக்கு அங்கு நடப்பதை ஒரு வீடியோவாக எடுத்து அனுப்பினார். அதை பார்த்ததும் பதட்டம் அடைந்தார். உடனே நமச்சியுடன் சேர்ந்து மது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தமிழை பார்த்ததும் அந்த ரவுடிகள் ஓடி விட்டார்கள். மேலும் தமிழுக்கு நன்றி கூறினார் மது. பின் மதுவுக்கு சாப்பாடு கொடுத்து அவரை சமாதானம் செய்தார்கள் இருவரும். அந்த நேரம் சரஸ்வதி தமிழுக்கு அழைத்து பேசினார். என்ன செய்கிறார், என்ன நடந்தது என்று விசாரித்தார். ஆனால் தமிழ் அதற்கு உண்மையை சொல்லாமல் பொய் சொல்லி அடுக்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…