தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் நடேசன் இருவரும் மருத்துவமனைக்கு செக்கப் செய்ய கிளம்பினார்கள். அந்த நேரம் வசுந்தராவை எந்த வேலையும் செய்ய கூடாது என்று கூறிவிட்டு கிளம்பினார்கள். பின் வசுந்தராவுக்காகா சரஸ்வதி வேண்டுதல் வைத்து இருந்தார். அதை செய்வதற்கு கோவிலுக்கு கிளம்பலாம் என்றார். ஆனால் கார்த்திக் எங்கேயும் போக வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து வேண்டுதல் செய்துகொள்ளலாம் என்று கூறினார். இதனால் சரஸ்வதி தான் செய்வாய் கிழமை தோறும் விரதம் இருந்து குழந்தையோடு வந்து வேண்டுதலை நிறைவேற்றுவதாக வேண்டிக்கொண்டார். இதை தெரிந்து கொண்ட வசுந்தரா எனக்காக நீங்கள் விரதம் இருக்க வேண்டாம், உடனே அந்த வேண்டுதலை நிறைவேற்றிடலாம் என்று கூறினார். அதே நேரம் சந்திரகலா தன் மகன் ஆதிக்கு ராகினியை திருமணம் செய்து வைத்து கோதையின் திமிரை அடக்க வேண்டும் என்று திட்டம் போட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…