Tamizhum Saraswathiyum Today Episode | 20.09.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் பேச்சையும் மீறி வசுந்தரா மற்றும் சரஸ்வதி இருவரும் கோவிலுக்கு வேண்டுதல் செய்ய கிளம்பினார்கள். அங்கு சென்றதும் தன் வேண்டுதலை சரஸ்வதி செய்தார். வசுந்தரா எங்கும் போகாமல் அங்கேயே அமர்ந்து பார்த்தார். பின் வேண்டுதல் முடிந்ததும் இருவரும் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு பிரசாதம் சாப்பிட்டார்கள். சரஸ்வதி அருகில் பேசிக்கொண்டு இருந்த போது கார்த்திக் இடம் ஃபோனில் வசுந்தரா பேசினார். அப்போது கோவிலில் இருப்பதை மறைத்து பொய் சொல்லி சமாளித்தார் வசுந்தரா. ஆனால் பேசிக்கொண்டே கவனம் இல்லாமல் கால் தவறி கீழே விழுந்தார் வசுந்தரா. இதை ஃபோனில் கேட்ட கார்த்திக் பதறினார். உடனே சரஸ்வதிக்கு தமிழ் அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்தார். சரஸ்வதி வசுந்தராவை அருகில் இருக்கும் ஹாஸ்டலுக்கு அழைத்து செல்வதாக கூறினார். உடனே வீட்டில் உள்ள அனைவரும் பதறிப்போய் வந்தார்கள். முக்கியமாக சந்திரகலா அங்கு வந்து சரஸ்வதி தன இதற்கு காரணம் என்று கூறினார். மேலும் தான் இன்னும் கர்பம் ஆகாமல் என் மகள் ஆனதும் பொறாமையில் இப்படி செய்து இருப்பாள் என்று கூறினார் சந்திரகலா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author