தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க சரஸ்வதி போராடினார். வீட்டுக்கு திரும்பினாலும் யாரிடமும் எந்த பதிலும் சொல்லாமல் நின்றார். அதற்குள் கீதா அவரது மகள் கீதாவுடன் கோதை வீட்டுக்கு வந்தார். வந்ததும் தன் மகளை எமாற்றியதற்கு தமிழ் அவரது கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று கூறினார். தமிழ் செய்த தவறுக்கு இதான் ஒரே வழி என்று கூறினார். ஆனால் சரஸ்வதி இப்போதும் பொறுமையாக பேசினார். என் கணவன் எந்த தவறும் செய்யவில்லை மது சொன்னது அனைத்தும் பொய் தான் என்று நிரூபிக்க ஒரு சாட்சி வீட்டுக்கு வருகிறது என்று கூறினார். பின் அந்த சாட்சிக்கு அழைத்தார் சரஸ்வதி. அதற்குள் அந்த ஆள் வீட்டுக்கே வந்தார். அது வசுந்தராவுக்கு பார்க்கும் அதே டாக்டர். அவர் வந்து மது என்னிடம் தன தனக்கு மாதவிடாய் பிர்ச்சனைக்கு வைத்தியம் paarkkiraar. அவருக்கு கர்ப்பம் ஆகவோ, அதை களிக்கவோ வாய்ப்பே இல்லை என்று கூறினார். இதை கேட்டதும் கோதை வீட்டில் அனைவரும் நிம்மதியை பெருமூச்சு அடைந்தார்கள். பின் கோதை மதுவை அறைந்து அவரது வாயாலே உண்மையை சொல்ல வைத்தார். மதுவும் நடந்ததை சொல்ல ஆரம்பித்தார். ஆனால் சந்திரகலா தன் பெயர் இதில் வந்து விடுமோ என்று நடுவி நிறுத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…