ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, போலீஸ் அதிகாரிகள் தேவியை கைது செய்து அழைத்து சென்றார்கள். அவர்கள் மரியாதையாக கூப்பிட்ட பொழுது தேவி போகாததால் அவரை இழுத்து செல்வது போல் ஒரு நிலை வந்தது. பின் ரம்யா தன் அம்மாவை இந்த வழக்கில் இருந்து வெளியே வர உதவி செய்யுமாறு அருணாச்சலம் இடம் கெஞ்சினார். பார்வதி காலில் விழுந்து கதறினார் ரம்யா. ஆனால் யாருமே அவருக்கு சரி வர பதில் சொல்லவில்லை. அதனால் உடனே பிரியாவை பார்த்து பேசினார். தனக்கு இருபது என் அம்மா மட்டும் தான், என் அம்மா எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார். மேலும் ஜீவாவை இந்த புகாரை வாபஸ் வாங்க வைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதை கேட்ட பிரியா மனம் மாறி ஜீவாவிடம் பேசி பார்த்தார். என்னதான் தவறு செய்தாலும் இதனால் ரம்யா பாதிக்கப்படுகிறாள் அதனால் தேவியை விட்டு விடலாம் என்று கூறினார் பிரியா. மேலும் அவர் செய்த இந்த காரியத்தால் தன நமக்கு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அணிந்து உள்ளது என்றும் கூறினார். இப்போது நாம் சந்தோசமான ஒரு வாழ்க்கையை வாழ இதுவும் ஒரு காரணம் என்று கூறினார். ஆனால் அதை கேட்ட ஜீவா கோவத்தில் கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…