Tamizhum Saraswathiyum Serial Today Episode | 18.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இடம் சரஸ்வதி தன் மனதில் உறுத்தும் விஷயத்தை வெளிப்படுத்தினார். இன்று ராகினி ஆதியுடன் வீட்டுக்கு வந்ததை, அவர்களை வசுந்தரா திருமணம் ஆகப்போவது போல் கிண்டல் கேலி செய்வதும் அவருக்கு சரியாக படவில்லை என்றார். மேலும் ராகினி மனதில் ஆதி மேல் என்ன அபிப்ராயம் உள்ளது. ஆதி விஷயத்தில் அவளுக்கு என்ன முடிவு எடுத்து உள்ளார் என்று குழப்பமாக உள்ளது என்று கூறினார். தமிழுக்கும் அந்த சந்திரகலா குணம் தெரிந்ததும் தன் தங்கையை அங்கு மருமகளாக அனுப்புவது சரியாக வரும் என்று தோணவில்லை என்று கூறினார். ஆனால் ராகினி படிப்பை முடிக்கும். பின் இதை பற்றி பேசலாம் என்று கூறினார். அர்ஜுன் புது வேலை ஆர்மபிக்க முக்கியமான ஒரு ஆவணம் வனக சென்று அது கிடைக்கவில்லை என்று கூறினார். இதனால் கார்த்திக் கோவப்பட்டு கத்தினார். ஆனால் அர்ஜுன் அந்த ஆபிசர் அவரிடம் மரியாதை குறைவாக நடந்தது கொண்டதாகவும், தன்னிடம் சரிவர பேசாமல் வேலையை தட்டிக்களிப்பதாகவும் கூறினார். இதனால் உடனே கார்த்திக் மற்றும் தமிழ் இருவரும் அவரை பார்க்க கிளம்பினார்கள். அங்கு சென்று கார்த்திக் மற்றும் தமிழ் பேசுவதை காது குடுத்து கேட்கவில்லை அவர். ராகினியின் தோழி வீட்டுக்கு வந்து இருந்தார் ஒரு வேலையாக. அப்போது அர்ஜுன் செய்த விஷயம் தெரியவந்தது. அர்ஜுன் ஆதிக்கு வந்ததற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வந்து விட்டதாகவும் ஆதி கார் வைத்து இருப்பதால் ராகினி மழையில் நனையாமல் போவது தன அவருக்கு தேவை என்றும் கூறி இருந்ததாக கூறினார். இதனால் அர்ஜுன் மீது மரியாதை கூடியது ராகினிக்கு. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author