தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி மற்றும் சந்திரகலா இருவரும் தங்களது திட்டம் எதுவும் நடக்கவில்லை என்பதால் மிகுந்த கோவத்தில் இருந்தார். மேலும் அர்ஜுன் தன்னை விட முன்னுக்கு சென்று ராகினி மனதில் இடம் பிடித்து விடுவானோ என்று கத்தினார். இந்த மாதிரி ஒரு அசிங்கம் வேறு இருக்காது, அதற்காகவே ராகினியை தானே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தார் ஆதி. இதற்கு சந்திரகலாவும் உதவி செய்வேன் என்று கூறினார். ஆனால் ஆதி இதை தனியாகவே சரி செய்வேன் என்று சவால் விட்டார். அதே நேரம் கம்பேனியில் அனைவரும் சந்தோசமாக வேலையை பார்த்தார்கள். சரஸ்வதி தமிழுக்கு சாப்பாடு வைக்கும்போது அர்ஜுன் அங்கு வந்தார். அவரை பார்த்த சரஸ்வதி அவரையும் சாப்பிட அழைத்தார். அப்போதும் அர்ஜுன் மேல் தனக்கு இருந்த தவறான பார்வையை அவரிடமே கூறினார். ஆனால் இப்போது அந்த கோணம் மாறி அர்ஜுன் மீது இப்போது நம்பிக்கை வந்து உள்ளது என்று கூறினார். அந்த நேரம் அர்ஜுன் ஃபோனை எதார்த்தமாக பார்த்த சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். அவரது ஃபோனில் அர்ஜுன் ராகினியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து இருந்தார். இதனால் சரஸ்வதி குழப்பம் அடைந்தார். அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…