Tamizhum Saraswathiyum Today Episode | 26.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அழைத்து குமார் வீட்டுக்கு திரும்பியதும் உடனே தமிழுக்கு அழைத்து பேசினார். என்ன விஷயம் என்று கேட்டார். அப்போது தமிழ் அவர் கம்பேனியில் நடக்கும் குளறுபடியால் வீடே குழம்பி போய் இருப்பதாக கூறினார். பின் குமார் அந்த 3 கோடி பணத்தை எப்படியும் ஏற்பாடு செய்து நாளை காலை 8 மணிக்கு தருகிறேன் என்று கூறினார். அதையும் நம்பி வீடே சந்தோசம் அடைத்தது. வீட்டில் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். பணம் கிடைத்து விட்டதால் வசுந்தரா உடனே அவர் அம்மாவுக்கு அழைத்து, பணம் ஏற்பாடு ஆகிவிட்டது அதனால் இனி நீங்களும் அதை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கூறினார். இதனால் சந்திரகலா அதிர்ச்சி அடைந்தார். யாரிடம் இந்த ஏற்பாடுகள் செய்தது என்று கேட்டு தெரிந்து கொண்டார். அப்போது குமார் என்பவர் தான் பணம் கொடுத்து உதவுகிறார் என்று கூறினார். இதை கேட்டதும் ஆதி அந்த குமாரையும் விலைக்கு வாங்க நினைத்தார். அவர்கள் திட்டப்படியே குமாரும் அவர்கள் உதவியை எதிர்பார்த்து கோதை வீட்டுக்கு துரோகம் செய்தார். காலையில் தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் குமார் வீட்டுக்கு வந்ததும் பணத்தை குடிப்பது போல் கொடுத்தார். ஆனால் அதில் வெறும் 50 லட்சங்கள் மட்டுமே இருந்தது. இப்படி நம்ப வைத்து ஏமாற்றி விட்டீர்களே என்று கார்த்திக் கோவத்தில் கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author