Raja Rani 2 Today Episode | 31.10.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை திடப்படுத்தி சரவணன் ஊக்குவித்தார். சிவகாமி மீண்டும் சந்தியாவை அந்த வெற்றிக் கோப்பையை பெற்று வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கூறி கிளம்பினார். குடும்பத்தார்கள் கிளம்பியதும் சந்தியா அவர்கள் நினப்பிலே இருந்தார். அதே போல் சரவணனும் சந்தியா பற்றியே யோசித்தார். வீட்டில் அர்ச்சனா செந்தில் மற்றும் மயில் அனைவரும் சந்தியா வருகைக்கு காத்திருந்தார்கள். அவருக்கு ஆரத்தி எடுக்க தயாராக இருந்தார்கள். ஆனால் சந்தியா வராததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். பின் சிவகாமி அம்மா நடந்ததை கூறி வருத்தப்பட்டு பேசினார். வீட்டில் அனைவரும் வருந்தினார்கள். சரவணன் அறையில் பார்க்கும் இடம் எல்லாம் சந்தியாவை பார்ப்பது போல் இருந்தது. மேலும் அவரே வந்து பேசுவது போல் நினைத்தார். அதே நேரம் சந்தியா சரவணன் சொன்ன விஷயத்தை யோசித்து இனியாவது எப்போதும் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தார். எப்போதும் போல இல்லாமல் அதிகாலையில் எழுந்து தனக்கு தானே பயிற்சி செய்துகொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author