தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சொன்னதை கேட்டு ராகினியை அழைத்து வீட்டில் விசாரித்தார்கள். ராகினிக்கு யாரை விருப்பமோ அவரை தன திருமணம் செய்வோம் என்றும் கூறினார்கள். பின் ராகினி தனக்கும் அர்ஜுனுக்கு எந்த காதலும் இல்லை, நனாகள் நண்பர்கள் தான் என்றார். எனக்கு தான் ஆதியை திருமணம் செய்ய முழு மனதோடு தான் சம்மதம் என்று தெளிவாக கூறினார். இதை கேட்ட தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். எதற்காக பொய் சொல்கிறாய் என்று கேட்டார் தமிழ். அதற்கும் ராகினி தன எந்த பொய்யும் சொல்லவில்லை என்றார். இதனால் கோதை வீட்டில் அனைவரும் தமிழ் மற்றும் சரஸ்வதி வேண்டும் என்றே சந்திரகலாவை பிடிக்காததால் தான் இப்படி செய்கிறார்கள் என்று முடிவு செய்தார்கள். மேலும் தமிழ் தன் சுயநலத்துக்காக தன் தங்கை வாழ்க்கை வீணாவதை கூட கண்டு கொள்ளவில்லை என்று பெயர் வந்தது. தமிழ் மீண்டும் நடந்ததை சொல்ல முயற்சி செய்தார். ஆனால் கோதை இனி இதை பற்றி யாரும் பேச வேண்டாம் எனவும், இந்த திருமணம் நடந்தே தீரும் என்று கூறினார். பின் ராகினி தனியாக வருத்தத்தில் இருந்தார். அதை பார்த்து தமிழ் கோவம் கொண்டார். எதற்காக பொய் சொல்லி இப்படி உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார். அப்போது தான் சந்திரகலா ராகினிக்கு அழைத்து பேசி மிரட்டியது தெரிய வந்தது. பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இனி இந்த திருமணம் நின்றாள் அது கோதைக்கு தான் கேட்ட பெயர் என்று கூறி ராகினி மனதை குழப்பி இருக்கிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….