தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியின் நிச்சயதார்த்தம் மற்றும் தீபாவளிக்கு சேர்த்து துணிகள் வாங்கி வந்தார்கள் கோதை மற்றும் நடேசன். அதை வாங்கி பார்க்க கூட ராகினிக்கு விருப்பம் இல்லாமல் நின்றார். அதை கவனித்துக் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் ஒன்றும் செய்ய முடியாமல் நின்றார்கள். அந்த நேரம் தமிழ் மற்றும் சரஸ்வதியை தலை தீபாவளிக்கு வீட்டுக்கு அழைத்தார் சொக்கலிங்கம். சரஸ்வதி தயங்கி தயங்கி பேசினார். தமிழையும் முறையாக அழைத்து பேசினார்கள். கோதையும் தள தீபாவளிக்கு பிறந்த வீட்டுக்கு சென்று கொண்டாடுவது தன முறை என்று சொல்லி அனுப்பி வைத்தார். போகும்போது சொக்கலிங்கம் மற்றும் வாசுகிக்கும் தீபாவளிக்கு துணி எடுத்து குடுத்துவிட்டார் கோதை. இதனால் சரஸ்வதி மிகவும் சந்தோசமாக கிளம்பினார் அவர் பிறந்த வீட்டுக்கு. ராகினிக்கு அர்ஜுன் நண்பர் அழைத்து ராகினி செய்தது பெரிய தவறு என்று சுட்டி காட்டினார். அர்ஜுன் நிலையை பார்க்குமாறு கூறி வீடியோ கால் செய்தார். அர்ஜுன் குடித்துவிட்டு சுயநினைவு இல்லாமல் கிடப்பதை பார்த்த ராகினி பதறினார். உடனே அவரை பார்க்க அர்ஜுன் வீட்டுக்கு கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…