ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபனும் எதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனே ஒரு துநிக்கடைக்கு சென்று அவருக்கு ஒரு சட்டை பார்த்தார். அந்த கடையில் இருக்கும் 40 50 சட்டைகளை பார்த்தும் அவருக்கு திருப்தியாக இல்லை. மேலும் பார்த்து பார்த்து ஒரு நல்ல சட்டையை தேர்ந்து எடுத்தார். ஆனால் அதற்குள் காவ்யா பார்க்கும் இடம் எல்லாம் பார்த்திபன் நிர்ப்பது போல் தெரிந்தது. துணிக்கடையில் வேலை பார்ப்பவர்கள், அங்கு கடைக்கு வந்தவர்கள் என்று யாரை பார்த்தாலும் பார்த்திபன் தன்னிடம் வந்து பேசுவது போலவே அவருக்கு தெரிந்தது. காவ்யா அதை யோசித்து தன் மனம் தன்னையே அறியாமல் பார்த்திபனை விரும்ப ஆரம்பித்துவிட்டதோ என்று நினைத்தார். எங்கும் எதிலும் யாரையும் பார்த்தாலும் அது பார்த்திபன் போல் தெரிவதால் தன் காதலை உணர ஆரம்பித்தார் காவ்யா. அதே நேரம் ஜீவாவுக்கு சட்டை எடுக்க பிரியாவும் ஒரு கடைக்கு சென்றார். அவருக்கு ஜீவாவின் சட்டியின் அளவுகூட மறந்து விட்டு நின்றார். மனதில் ஜீவா இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னதை மட்டுமே நினைத்து நினைத்து நொந்து கொண்டார். ஆனாலும் வீட்டில் பெரியவர்கள் கவலை படாமல் இருக்க இந்த சட்டையை வாங்கி கொடுக்க வேண்டும் என்று வாங்கினார். துறை அருணாச்சலம் வீட்டுக்கு வந்து இருந்தார். அவர் தான் இந்த வருடம் சங்கத்தில் தன தலைவர் பதவிக்கு நிற்க போவதாக கூறினார். இதை கேட்டு அருணாச்சலம், பார்த்திபன், ஜீவா மற்றும் லிங்கம் அனைவருமே சந்தோசமாக இருந்தார்கள். ஆனால் இந்த விஷயம் ஜே.கே மூலம் தேவிக்கு தெரிய வந்தது. இதனால் வேண்டும் என்றே தனக்கு எதிராக அருணாச்சலம் கூட சேர்ந்து துரை இப்படி செய்வதாக தவறாக நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…