Tamizhum Saraswathiyum Today Episode | 11.11.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இங்கு தேடியும் ராகினி மற்றும் அர்ஜுன் கிடைக்கவில்லை. அதே நேரம் ராகினி இங்கு இருக்கிறார் என்று சரஸ்வதியை கேட்டு குடைய ஆரம்பித்தார்கள். சரஸ்வதி வேறு வழி இல்லாமல் ராகினி இரவில் இருந்து காணவில்லை என்றும் அவளை தேடி தான் தமிழ் இரவே சென்று இருப்பதாக கூறினார். நேற்று இரவு அர்ஜுன் விஷத்தை குடித்து விட்டதால் அவரை பார்க்க தான் ராகினி சென்று இருப்பதாக சரஸ்வதி கூறினார். இது கேட்ட கோதை அதிர்ச்சி அடைந்தார். இது எதற்காக எங்களிடம் இரவே சொல்லவே இல்லை என்று நடேசன் கோவம் கொண்டார். மேலும் கோதை தன் மகளும் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்று நொந்து கொண்டார். தன் மகன்களும் தன் பேச்சை கேட்காமல் காதல் திருமணம் செய்தார்கள். அதே போல் என் மகளும் இப்படி காதலித்து என் வளர்ப்பு தவறாகும் படி செய்து விட்டால். இந்த சொந்தங்களுக்கு மத்தியில் என் மானம் போவதற்கு பதில் என் உயிர் போவதே நல்லது என்றார். சந்திரகலா இந்த நிலையிலும் தனக்கு கொடுத்த வாக்கு என்ன ஆனது? என் மகனுக்கு என்ன பதில் என்றும் மேலும் மேலும் கோதையை சீண்டினார். கோதை இன்று வாய் பேச முடியாமல் கூனி குறுகி நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author