’அன்று விமர்சித்தனர், இன்று புகழ்கின்றனர், எதுவும் நிரந்தரம் இல்லை’ – நடிகர் யாஷ்
ஒரு காலத்தில் விமர்சித்த ஊடகங்களும், துறைகளும் இன்று புகழ்கின்றன, எதுவும் நிரந்தரம் இல்லை, என யாஷ் உருக்கமாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஒரு காலத்தில் தென் இந்திய சினிமாக்கள் என்றாலே வட இந்திய ஊடகங்களும், வட இந்திய சினிமா துறையும் வறுத்து எடுக்கும். தற்போது தென் இந்திய சினிமாக்கள் உலகளாவிய அளவில் நிமிர்ந்து நிற்கிறது. பாலிவுட் சரிந்து நிற்கிறது. இதையே நடிகர் யாஷ் ’அன்று விமர்சித்தனர், இன்று புகழ்கின்றனர், எதுவும் நிரந்தரம் இல்லை’ என்று சிம்பாலிக்காக கூறி இருக்கிறார்.
“ கே.ஜி.எப் மட்டுமே தனித்து உலகளாவிய அளவில் 1200 கோடி வசூலை செய்து இருக்கிறது. பாலிவுட்டிற்கு தற்போதெல்லாம் 200 கோடி வசூலே பெரிய இலக்காக தான் இருக்கிறது. “