தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி அர்ஜுன் இடம் இரவு முழுதும் பேசி சிரித்து அவர்களது காதல் கதியை பேசிக்கொண்டார்கள். அதை கவனித்த சரஸ்வதி அவர்களை கேலி செய்தார். அதை வசுந்தராவிடம் கூறவும் செய்தார். ஆனால் வசுந்தரா அதை கண்டுகொள்ளாமல் அவர் வேலையை பார்த்தார். ஆதி காலையில் இருந்து எதையுமே சாப்பிடாமல் ராகினியை நினைத்து வருந்தினார். அதை பார்த்த சந்திரகலா கண்டிப்பாக ராகினி உனக்குத்தான். நான் எப்படியாவது அவளை உனக்கு மனைவி ஆக்குவேன் என்று உறுதியாக கூறினார். நாளை அந்த வீட்டுக்கு சென்று, அர்ஜுன் குடும்பம் யார் என்ன என்பதை பார்த்து பின் அதை திட்டம் போடலாம் என்று கூறினார் சந்திரகலா. அடுத்த நாள் பெண் கேட்டு அர்ஜுன் அவர் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தார். அவரை அழைத்து அனைவரும் உபசரித்தார்கள். ஆனால் வசுந்தரா மட்டும் விருப்பம் இல்லாமல் அங்கு நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….