அரசு செவிலியர்கள் மற்றும் டாக்டர்களை கண்காணிக்க வருகிறது புதிய பறக்கும் படை!

அரசு செவிலியர்கள் மற்றும் டாக்டர்களை கண்காணிக்க புதிய பறக்கும் படையை அமைக்கும் படி சென்னை ஹைகோர்ட் சுகாதாரத்துறைக்கு உத்தரவு இட்டு இருக்கிறது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேரம் தவறி வருவதாகவும், வராமலே இருப்பதாகவும் புகார் எழுந்து வந்த நிலையில், அவர்களை கண்காணித்திட பறக்கும் படையை அமைக்க சொல்லி சுகாதாரத்துறைக்கு உத்தரவு இட்டு இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

“ அரசு மருத்துவமனைகளில் பணி புரிபவர்கள், பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இணைந்து தங்கள் விசுவாசத்தை காட்டுவதால் பெரும்பாலான மருத்துவ இடர்களும் நிகழ்கின்றது. இதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது “

About Author