ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்வதி காவ்யாவிடம் கோவமாக பேசினார். என் மகன் இருக்கும் பக்கமே நீ வர வேண்டாம் என்று கூறினால், அதற்கு மாறாக என் வீட்டுக்கே அவனை பார்க்க வந்து இருப்பதை அவருக்கு விருப்பம் இல்லை. அதனால் காவ்யாவும் வருத்தப்பட்டார். அப்போது தான் எதும் எறிய தவறு செய்யவில்லை, சட்டை கொடுத்தது ஒரு தவறா? என்று கேட்டார். அதற்கு பார்வதி, ஆமாம் என் மகனுக்கு நல்ல பெண்ணாக தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நீ திருமணத்துக்கு முன் வேறு ஒருவனை காதலித்து புருஷனாக நினைத்து வாழ்ந்து இருக்கிறாய். அதனால் நீ என் மகனோடு வாழ தகுதி இல்லாதவள் என்று கூறினார். இதனால் இப்படி திருமணத்துக்கு முன் காதலிப்பது தவறு என்றால், இந்த உலகத்தில் முக்கால்வாசி பேர் யாரும் திருமணம் செய்யவே முடியாது என்று கூறினார் காவ்யா. பின் அனைவரும் சேர்ந்து அருணாச்சலம் பார்வதியின் 60வது திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்தார்கள். புது மண தம்பதிகளை போல் இருவரையும் அலங்கரித்து கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் நடந்தது. அப்போது காவ்யா பார்த்திபன் வாங்கி கொடுத்த சேலையை கட்டிக்கொண்டு வந்தார். அதே போல் பிரியாவும் ஜீவா வாங்கி கொடுத்ததை கட்டி இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….