தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வரவேற்பு முடிந்து அனைவரும் அவர் அவர் அறைக்கு சென்று படுத்தார்கள். தமிழ் சரஸ்வதி மட்டும் இனிதான் சந்திரகலாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அர்ஜுன் தூங்கும்போது அவருக்கு அவரது நண்பர் அழைத்து இருந்தார். அதில் அவர் வெளியே நிற்கிறேன் உடனே வெளியே வா என்று கூறினார். இவரும் அதை நம்பி வெளியே போனார். போனதும் இருவரையும் மயக்கம் அடைய வைத்து கடத்தினார் ராமு. அடுத்த நாள் காலையில் மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. நேரம் ஆகவே மாப்பிள்ளையை அழைத்து வர நமச்சி வந்தார். ஆனால் அர்ஜுன் அவரது அறையில் இல்லை என்றதும் அனைவரும் பதிரினார்கள். சந்திரகலா ஒன்றுமே தெரியாதது போல் பேசினார். அர்ஜுன் இங்கு சென்றார் என்று ஆளுக்கு ஒரு பக்கம் தேட ஆரம்பித்தார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றார்கள். போது அர்ஜுன் ஒரு வீடியோ அனுப்பி இருந்தார் ராகினிக்கு. தான் ஸ்வேதாவை தன் திருமணம் செய்துகொள்ள போவதாகவும். ராகினியை பணத்துக்கு ஆசைப்பட்டு தான் காதலிப்பது போல் நடித்தேன் என்றும் கூறி இருந்தார். ஆனால் அர்ஜுனை மிரட்டி அப்படி பேச வைத்து இருந்தார் ராமு. இல்லை என்றால் அவரது நண்பரை கொன்று விடுவேன் என்று கூறி இருந்தார். இதை பார்த்த குடும்பமே சிதைந்து போனது. அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று புரியாமல் நின்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….