ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனிமையில் வேதையில் இருந்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பார்வதி அவரிடம் வந்து இந்த வீட்டை விட்டு போவதற்கு இதுதான் சரியான நேரம் என்று கூறினார். வீட்டில் அனைவரும் உன் மேல் வெறுப்பாக இருக்கும்போதே வேறு எங்காவது சென்றுவிடு. அப்போது தான் பார்த்திபன் உன்னை மறந்து விடுவான் என்று கூறினார். காவ்யா தன் தவறு இதில் என்ன இருக்கிறது? தான் திருமணத்துக்கு முன் காதலித்தது அவளோ பெரிய குற்றம் போல் எதற்கு நடத்த வேண்டும் என்று புலம்பினார். ஆனால் பார்வதி தனக்கு தன் மகன் இதை கேள்விப்பட்டாள் அவன் நிலை மிகவும் மோசமாகும் என்று கூறினார். பின் உடனே அருணாசலம், பார்த்திபன் மற்றும் ஜீவாவிடம் காவ்யா இந்த வீட்டை விட்டு போவதில் உறுதியாக இருக்கிறார் என்பது போல் திரித்து பேசினார். அவர் நினைப்பதை காவ்யா சொன்னது போல் சொல்லி மேலும் பிரச்சனையை பெரிது படுத்தினார். ஜீவா காவ்யா எதரக்கு கோவிலை விட்டு வெளியே சென்றார் என்ற காரணம் தெரியாமல் நாம் எதிஐஏயும் முடிவு செய்ய முடியாது. கவய இப்படி பொறுப்பு இல்லாமல் செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறினார். ஆனால் பார்வதி அதையும் தட்டி விட்டார். பின் ஜீவா காவ்யாவிடம் வந்து அவர் எதற்காக கோவிலை விட்டு வெளியே சென்றார் என்பது பற்றி விசாரித்தார். அப்போது காவ்யா உண்மையை சொல்லவே அவருக்கு மேலும் குற்ற உணர்ச்சி அதிகம் ஆனது. தானும் இந்த நிலைக்கு ஒரு காரணம் என்று நினைத்தார் ஜீவா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…