ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது வேண்டும் என்றே தேவி மற்றும் ஜே.கே இருவரும் அவரை வெறுப்பேற்றும் விதமாக பேசினார்கள். இதனால் ஜீவா கோவத்தில் ஜே.கே மீது எகிறினார். இவர்கள் சண்டையை பார்த்து பார்த்திபன் பார்வதி அனைவரும் வந்தார்கள். நடந்ததை விசாரித்தார்கள். அப்போது தேவி, ஜீவை பிரியா கை நீட்டி அறைந்துவிட்டாள். அதுவும் கோவிலில் அத்தனை பேர் முன்னிலையிலும் கட்டிய கணவனை எப்படி அடிக்கலாம் என்று கேட்டார். பார்வதி பிரியாவிடம் இதை பற்றி கேட்டார். பிரியாவும் ஜீவாவை அடித்தேன், அவர் தப்பு செய்தார் அதனால் நான் எந்த தவரும் செய்யவில்லை என்று கூறினார். ஆனால் பார்வதி என்ன சொன்னாலும் தன மகனை கை நீட்டி அடித்தது தவறு தான் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். ஆனால் பிரியா அதற்கு மறுத்து விட்டார். அருணாச்சலம் ஜீவா செய்தது தான் தவறு என்று பிரியாவுக்கு துணையாக நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….