தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியை வைத்து தான் காரியம் சாதிக்க முடியும் என்று அர்ஜுன் மற்றும் அவரது குடும்பம் அவருக்கு முன்னால் ஒரு நாடகத்தை ஆரம்பித்தார்கள். நீயும் உன் அப்பாவை போல் ஒரு நல்ல இடத்தில் வேலை செய்வதை பார்த்தால் எனக்கும் சந்தோசமாக இருக்கும் என்றார் அவரது அம்மா. மேலும் ராகினிக்கு இங்கு உரிமை இருக்கிறது, அதை உனக்கு கொடுக்க நினைக்கிறாள், அவளுக்கு அவளது கணவன் நல்ல இடத்தில் இருப்பதை தானே விரும்புவாள் என்று கூறினார் அவரது அக்கா. இந்த பேச்சை கேட்டு ராகினியும் தன் கணவர் அர்ஜுன் இந்த பதவியில் இருந்தால் தனக்கும் கௌரவம் என்று நினைத்தார். அதற்கு மீண்டும் கோதை இடம் வந்து என்ன முடிவு செய்து உள்ளீர்கள் என்று கேட்டார். ஆனால் கோதை என்ன சொல்வதென தெரியாமல் நின்றார். பின் நடேசன் இடம் அறிவுரை கேட்டார். தமிழ் மற்றும் நடேசன் இருவரும் கோதை என்ன சொன்னாலும் சரி என்றார்கள். ஆனால் கார்த்திக் இதில் தனக்கு விருப்பம் இல்லை. எடுத்ததும் இப்படி முதலாளி பொறுப்புக்கு வருவது சரி அல்ல என்று கூறினார். இது நடக்கவும் கூடாது என்றார். ராகினி உடனே நான் பெண் என்பதால் இந்த கம்பேனியில் எனக்கு உரிமை இல்லையா என்று கேட்டார். ஆனால் கார்த்திக் அவர் முடிவில் தீர்மானமாக இருந்தார். இந்த இடத்துக்கு வர படிப்பு மட்டும் இல்லாமல் சில வருடங்கள் அனுபவம் வேண்டும் என்று கூறினார். ஆனால் அர்ஜுன் இடம் அது இப்போதைக்கு இல்லை. சில வருடங்கள் கழித்து இதை பற்றி பேசலாம் என்றார் கார்த்திக். இதை கேட்ட ராகினி கோவத்தில் கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…