Eeramana Rojave 2 Today Episode | 16.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பார்த்திபன் வீட்டுக்கு திரும்பினார்கள். அவர்களை பார்த்து வீடே கொண்டாடியது. மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் பார்வதி எரிச்சலில் இருந்தார். தான் இத்தனை சொல்லியும் வீட்டுக்கு காவ்யா வந்துவிட்டாள் என்று கோவத்தில் இருந்தார். பார்த்திபன் மற்றும் காவியாவை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அருணாச்சலம், துரை, மஹா, பிரியா என வரிசையாக காவ்யாவிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார்கள். ஆனால் காவ்யா அது எல்லாம் எனக்கு தேவை இல்லை, தன்னை புரிந்துகொண்டாள் போதும் என்றார். காவ்யா மீது மேலும் கோவத்தில் இருந்தார் பார்வதி. காவ்யாவிடம் உன்னிடம் அத்தனை முறை வீட்டுக்கு வரக்கூடாது என்று கூறியும் நீ எப்படி வரலாம் என்று கேட்டார். நீ கல்யாணத்துக்கு முன் ஒருவனை நினைத்தவள் எப்படி தன் மகன் வாழ்க்கையில் இருக்கலாம் என்று நினைத்தார். அதை மறைமுகமாக கேட்கவும் செய்தார். ஆனால் காவ்யா அது எப்படி காதலிக்க ஆரம்பித்தாலே தவறாக நினைக்கலாம் என்று கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author