Mouna Ragam 2 Today Episode | 27.12.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை பார்க்க சொர்ணம் சக்தி வீட்டுக்கு வந்து இருந்தார். வந்ததும் நேராக வருண் இடம் சென்று இது வரை என்ன நடந்தது. எப்படி வருண் சொர்ணம் இருவரும் சேர்ந்து சக்தியை மீண்டும் வருனுடன் சேர்த்தார்கள் என்று கூறினார். இன்னும் என்ன என்ன எல்லாம் இவர்கள் சேர்ந்து செய்தார்கள் என்பதையும் கூறினார். ஆனால் எதற்குமே வருண் எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் சொர்ணம் மனம் நொந்து போனார். அடுத்து சக்தியை பார்த்து இதற்கு தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக கூறினார். இதை செய்தால் கண்டிப்பாக வருண் நிலை மாறும் என்று கூறினார் சொர்ணம். ஆனால் சக்தி இதை செய்ய முடியாது என்று கூறினார். வருண் தன் அம்மாவை நெருப்பில் பார்த்ததால் தான் இந்த நிலை, அதையே இல்லை என்று ஆக்கிவிட்டால் கண்டிப்பாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று உறுதியாக கூறினார் சொர்ணம். பின் யோசித்து பார்த்ததில் இது நல்ல யோசனை என்று நினைத்தார் சக்தி. அதி அவரது வீட்டில் மனோகர், தருண் ஸ்ருதி இருக்கும்போது இந்த திட்டத்தையும் கூறினார். ஆனால் மனோகர் அது சரி வராது என்று உறுதியாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….