Tamizhum Saraswathiyum Today Episode | 29.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா ஆதியை பார்க்க ஜெயிலுக்கு வந்து இருந்தார். ஆதி ராகினி மற்றும் அர்ஜுன் சந்தோசமாக வாழ்வது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறினார். ஆனால் சந்திரகலா அதை பற்றி எதுவும் யோசிக்காமல் இருக்குமாறு கூறினார். கண்டிப்பாக ராகினி அர்ஜுன் வாழ்க்கை மட்டும் இல்லை அந்த கோதை குடும்பத்தையே பிரிக்க நான் ஏற்பாடு செய்வேன் என்று கூறினார். மேலும் அந்த அர்ஜுன் கோதை கம்பேனியில் ஒரு டைரக்டர் ஆகிவிட்டார் என்ற விவரமும் ஆதிக்கு தெரிய வந்தது. மேலும் கோவத்தில் கத்தினார். இது போன்ற வாழ்க்கைக்காக தான் என்னிடம் அவன் போட்டி போட்டு ராகினியை திருமணம் செய்து கொண்டான் என்று கூறினார் ஆதி. பின் ஆதியை சமாதானம் செய்து வைத்தார் சந்திரகலா. அடுத்து நேராக கோதை வீட்டுக்கு வந்தார் சந்திரகலா. வந்ததும் வசுந்தரா ராகினி என்று அனைவரையும் பார்த்து பேசினார். பின் ராகினி அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தில் அனைவருமே அவரது வீட்டுக்கு விருந்துக்கு வர வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author