ஒரு வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 7 கேப்டன்களை மாற்றி இருக்கிறது பிசிசிஐ!
ஒரு வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 7 கேப்டன்களை மாற்றி இருக்கிறது பிசிசிஐ.
நடப்பு ஆண்டு 2022 முடிவுக்கு வரும் நிலையில், டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று வித போட்டிகளுக்கு 7 கேப்டன்களை மாற்றி இருக்கிறது பிசிசிஐ. ஒரு காலக்கட்டத்தில் தோனி மூன்றுக்கும் தலைமை ஏற்று மூன்றிலும் கொடிகட்டி பறந்தார். அது போல வலிமையான தலைமை தான் தற்போது இந்திய அணிக்கு தேவையாக இருக்கிறது.
“ அணி என்பது நல்ல வீரர்களை மட்டும் பற்றியது அல்ல, அணி என்பது நல்ல தலைமையையும் சார்ந்து இருக்கிறது. அத்தகைய தலைமையை நிர்ணயிப்பதில் தான் தோனிக்கு அப்புறம் பிசிசிஐ மிகவும் திணறி வருகிறது “