தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் மற்றும் ராகினி இருவரையும் விருந்துக்கு சந்திரகலா அழைத்து இருந்தார். அதற்கு குடும்பத்தில் பேசி முடிவு எடுத்தார்கள். அர்ஜுன் அம்மா மற்றும் அவரது குடும்பமும் அவர் வீட்டுக்கு விருந்துக்கு செல்ல சமம்திதார்கள். பின் வசுந்தரா தன் அம்மா வீட்டுக்கு போக போகிறோம் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனல் சந்திரகலா வீட்டுக்கு அர்ஜுன் குடும்பத்தோடு விருந்துக்கு செல்வது சரியாக இருக்காது என்று சரஸ்வதி கோதையிடம் கூறினார். இருந்தும் கோதை இதை செய்து தான் ஆக வேண்டும் என்று கூறினார். பின் கார்த்திக் மீண்டும் அந்த கம்பேனியை வாங்க வேண்டும் என்று பேச்சை ஆரம்பித்தார். மீண்டும் அந்த திட்டம் சரியாக வரும் என்று வாதாடினார். ஆனல் கோதை இதை தான் நேற்றே முடிவு செய்து விட்டோம் மீண்டும் எதற்கு இதை பற்றி பேச வேண்டும். கொடுத்த முன் பணத்தை வாங்கும் வழியை பார் என்று கூறினார். ஆனால் கார்த்திக் மேலும் கோபம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….