Eeramana Rojave 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே தன் அறையில் ஐஷ்வர்யா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை எழுப்பி உடனே வெளியே போ என்று கூறினார். இது போல இனி நடந்ததுகொள்ளாதே என்று கூறினார். ஆனால் ஐஷ்வர்யா தனக்கு இது போல் இருப்பது தான் பிடித்து இருக்கிறது என்று கூறினார். ஜே.கே கோவத்தில் அவரை அடிக்க கை ஓங்கும் நேரத்தில் லிங்கம் உள்ளே வந்தார். அவர் மகளை அடிக்க கை ஓங்கியது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். என்ன நடக்கிறது என்று விசாரித்தார். அப்போது தான் ஐஷ்வர்யா தன்னை காதலிப்பதாக கூறுகிறார் என்று ஜே.கே கூறினார். ஆனால் அதை அப்படியே மாற்றி தன் மேல் எந்த பழியும் வர விடாமல் செய்ய, பொய் சொல்ல ஆரம்பித்தார் ஐஷ்வர்யா. தன்னிடம் நேற்று இரவு போதையில் தவறாக நடந்து கொண்டார், தன் வாழ்க்கையே வீணாக்கிவிட்டார் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியில் நின்றார் லிங்கம். பின் வீட்டில் அனைவர் மத்தியிலும் இந்த விஷயத்தை கூறினார். தன் மகளை ஜே.கே கெடுத்துவிட்டதாக கூறினார். உடனே ஜீவா மற்றும் பார்த்திபன் இருவரும் சேர்ந்து ஜே.கேவை அடுத்து கீழே இழுத்து வந்து சேர்த்தார்கள். ஜே.கே இது அனைத்துமே பொய் என்று கூறினார். ஆனால் அதை கேட்கும் நிலையில் யாரும் இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author