Tamizhum Saraswathiyum Today Episode | 24.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழுக்கு சாப்பாடு கொடுக்கும் நேரம் சரஸ்வதியின் முகம் வாடி இருந்தது. அதை கவனித்த தமிழ் உடனே என்ன நடந்தது, எதுவும் வீட்டில் பிரச்சனையா? மீண்டும் வசுந்தரா எதுவும் பேசினாலோ? என்று கெளிகளை கேட்டார். பின் சரஸ்வதி வீட்டில் நடந்ததை கூறினார். வீட்டுக்கு வந்த விருந்தாடிக்கு முன் வைத்து என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து நம் குடும்ப கௌரவத்தை கெடுக்கும் வகையில் இருந்தது என்று வருந்தினார் சரஸ்வதி. பின் சரஸ்வதி இனியும் வசுந்தராவுக்கு அவரது அம்மாவின் சுயரூபத்தை மறைத்து வைப்பதில் எந்த பயனும் இல்லை. உடனே அவரின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் என்று கூறினார். பின் தமிழ் வீட்டுக்கு வந்து வசுந்தராவை அழைத்து பேசினார். உன் அம்மாவை பற்றி பேசியது அனைத்துமே உண்மை என்று உனக்கு நான் நிரூபிக்க என்னோட வா என்று அழைத்தார். முதலில் வர மறுத்த வசுந்தரா பின் போகலாம் என்று கிளம்பினார். ஆனால் தமிழ் மற்றும் வசுந்தரா வருவதை பார்த்த சந்திரகலா எச்சரிக்கையாக பேசினார். தான் நல்லவர் போல பேசி நடித்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author