தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தன் அம்மா அப்பாவி என்று நம்பி தமிழை அசிங்கப்படுத்தி அனுப்பினார். பின் அவரது அம்மாவோடு கொஞ்ச நேரம் பேசி சிரித்து பின் வீட்டுக்கு கில்மணினார். கிளம்பும் நேரம் கீதா வீட்டுக்கு வந்தார். அவரும் இவரை நலம் விசாரித்து பேசினார். பின் வசுந்தரா கிளம்பினார் அவரது வீட்டுக்கு. அவர் கிளம்பியதும் சந்திரகலா எப்போதும் போல் கீதாவிடம் தன் திட்டம், தனது சூழ்ச்சி, தன் எண்ணம் பற்றி அவரே அவர் வாயால் கூறினார். கீதா ஒன்று விடாமல் எல்லாவற்றையும் அவர் வாயிலேயே சொல்ல வைத்தார். அதை வீடியோ கால் மூலம் வசுந்தராவுக்கு காட்டவும் செய்தார். தமிழ் மற்றும் நமச்சி வசுந்தராவுக்கு அவரது அம்மாவை பற்றி புரியவைக்க கீதா உதவியை கேட்டு இருந்தார்கள். இதனால் தன் அம்மாவின் சுயரூபம் பற்றி தெரிந்த வசு கண் கலங்கினார். இனியும் சரஸ்வதியை தவறாக நினைக்க போகிறாயா என்று தமிழ் கேட்டார். உடனே தன் அம்மா மேல் இருந்த கோவத்தை கொட்டி தீர்க்க மீண்டும் அவரது வீட்டுக்குள் நுழைந்தார். நீங்கள் பேசிய அத்தனையும் நான் பார்த்தேன். இப்படி ஒரு சுயநலவாதியை நான் பார்த்ததே இல்லை என்று கத்தினார். இது வரை என் குடும்பத்தை அழிக்க செய்த எல்லா விஷயங்களும் எனக்கு தெரிந்துவிட்டது. இனியும் உங்களை நம்புவதாக இல்லை என்று கூறினார். சந்திரகலா மேலும் நல்லவர் போல பேசினார். ஆனால் அதை எல்லாம் நம்ப வசு தயாராக இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….